Sunday, January 22, 2017

லாவா ஏ50, ஏ55 : ஏற்புடைய அம்சங்கள் கொண்ட பட்ஜெட் கருவிகள்.!

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள லாவா நிறுவனத்தின் ஏ55 மற்றும் ஏ50 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் முக்கியமாக கவனிக்க வேண்டியஒரு புள்ளியாக - இந்த விலை வரம்பில் சமீபத்தில் தொடங்கப்பட்ட மற்ற சாதனங்கள் போலல்லாமல் இக்கருவிகள் 3ஜி செயல்பாடு கொண்டுள்ளது. இரண்டு சாதனங்களுமே ஏற்கனவே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டு கருப்பு மற்றும் வெள்ளி வண்ண விருப்பங்களில் கிடைக்கப்பெறுகின்றன. மேலும் இக்கருவிகளின் விலை என்ன.? மற்றும் அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது




ரேம், மெமரி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களுமே குறிப்புகள் அடிப்படையில் ஒரே மாதிரியான அம்சங்களைதான் கொண்டுள்ளன. எனினும், லாவா ஏ55 கருவியானது 1ஜிபி ரேம் கொண்டிருக்க, லாவா ஏ50 கருவியானது 512எம்பி ரேம் கொண்டு வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே (32 ஜிபி வரை) மைக்ரோ எஸ்டிஅட்டை வழியாக மெமரி நீட்டிப்பு வசதி கொண்ட 8ஜிபி உள்ளடக்க சேமிப்பு திறன் கொண்டுள்ளது.


ஆண்ட்ராய்டு, டிஸ்ப்ளே, செயலி இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ள இக்கருவிகள் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கும். லாவா ஏ50 மற்றும் ஏ55 ஆகிய இரண்டு கருவிகளுமே 4 இன்ச் டபுள்யூவிஜிஏ (WVGA) (480x800 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் 1.2ஜிகா ஹெர்ட்ஸ் க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.


கேமரா, பேட்டரி ஒளியியல் அடிப்படையில், லாவா ஏ50 மற்றும் ஏ55 ஆகிய இரண்டு கருவிகளும் ஃபிளாஷ் கொண்டுள்ள ஒரு 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் முன்பக்கத்தில் விஜிஏ கேமரா கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே நிறுவனத்தின் முறையீடுகள் படி, 9 மணிநேர 2ஜி இணைப்பு பேச்சு-நேரம் வழங்கும் 1550எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொண்டுள்ளது.


இணைப்பு விருப்பங்கள், அளவீடு புதிதாக தொடங்கப்பட்ட இந்த சாதனங்களின் இணைப்பு விருப்பங்கள் : 3ஜி, வைஃபை, 802.11 பி/ஜி/என், ப்ளூடூத் 2.1, எ-ஜிபிஎஸ் மற்றும் ஒரு 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகள் அடங்கும். லாவா ஏ50 மற்றும் ஏ55 ஆகிய இரண்டு கருவிகளுமே அளவீட்டில் 123x63.4x9.65 மிமீ மற்றும் ஒரேமாதிரியான வடிவமைப்பு கொண்டுள்ளன.


No comments:

Post a Comment