மீண்டும் 2016 தேசிய ஆணழகர் போட்டியில் வெற்றியீட்டிய
புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் மாணவன்
இலங்கை உடற்கட்டு சம்மேளத்தினால் நடாத்தபட்ட 2016 ஆம் ஆண்டு மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகர் போட்;டியில் பங்குபற்றிய புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மாதவன் இராஜகுமாரன் 2016 ஆம் ஆண்டிற்கான ஜ10னியர் மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவாகியுள்ளார். இந்த போட்டியில் சுமார் 35 போட்டியாளர்கள் பங்குபற்றினர்
மலைய மாணவர்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்பது யாபருக்கும் தெரியும். தற்போதும் அன்மைக்காலமாகவும் இவர்கள் அனைத்து துறைகளிலும் சாதனைகளை மேற்க் கொண்டு வருகின்றனர். இருந்தும் இவர்களுக்கான சந்தர்பங்களும். உதவிகளும்¸ வாய்ப்புக்களும் கிடைக்காததினால் பல சாiனையாளர்கள் தோட்டங்களில் முடங்கி கிடக்கின்றனர். இவை கிடைத்தால் நாங்கள் சலைத்தவர்கள் அல்ல சாதிக்க பிறந்தவர்கள் என்று பறைசாட்டுகின்றார் நுவரெலியா மாவட்டம¸; கொத்மலை¸ லபுக்கல்ல தோட்டம்¸ கொண்டகலை பிரிவை சேர்ந்த தோட்ட தொழிலாளிகளான திரு திருமதி மாதவன் பரமேஸ்வரி தம்பதிகளின் புதல்வன் மாதவன் ராஜகுமாரன்இந்த மாதவன் ராஜ்குமாரன் முதலாம் இடத்தை பெற்று தேசிய ரிதியில் வெற்றி பெற்று சாதனையை மீண்டும் ஒரு சாதனையை நிலை நாட்டி உள்ளார். 2015 ஆம் ஆண்டு;ம் இதே சாதனையை நிலை நாட்டியமை குறிப்படதக்கது. இந்த சாதனை மலைகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது. இவர் தற்போது புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் உயர்தர (12) உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்ற வருகின்றார். இவரின் இந்த வெற்றி பாதையில்
• 2014.08.23 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற திறந்த அனைத்து பிரிவினர்களுக்கான ஆணழகர் போட்டியில் மூன்றாம் இடத்தையும்
• 2015 கல்வி அமைச்சின் ஏற்ப்பாட்டில் தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்காக ஹங்வெலயில் நடந்த போட்டியில் 1 ஆம் இடம்
• 2016 தேசிய ரீதியில் நடைபெற்ற மிஸ்டர் நோவிஸ் (ஆச. ழேஎiஉந) உடற்கட்டு போட்டியில் 3 ஆம் இடம்
• கல்வி அமைச்சின் ஏற்ப்பாட்டில் 2016 தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்காண திறந்த ஆணழகர் போட்டியில் 1 ஆம் இடம்
• தற்போது விமானபடை விளையாட்டு குழுவிற்ககும் தெரிவாகி உள்ளார்.
இந்த வெற்றிகள் தொடர்பாக மாதவன் ராஜ்குமாரனிடம் வினவிய போது
இப்போட்டியில் தங்க பற்றி வெற்றிபெற காரணமானவர்கள் எனது பெற்றோர்களான பரமேஸ்வரி மாதவன்¸ இந்து தேசிய கல்லூரி அதிபர்¸ உட்பட ஆசிரியர்கள் கண்டி பவர் ரீ கிரியேட் சென்டர் உரிமையாளர் பாக்கியராஜ் ஐயா அவர்கள்¸ நுவரெலியா எப்சலூட் ஜிம் உரிமையாளரும்¸ பயிற்றுவிப்பாளருமான அமில தர்மதிலக ஐயா அவர்கள் இப்போட்டிக்கான தொடர்சியாக அனுசரனை வழங்கிய கொழும்பு ஜனதா ஸ்டீல் உரிமையாளர் வாசுதேவன் ஐயா அவர்கள்¸ கொழும்பு டையன் ஸ்டீல் ஹாட்வெயார் உரிமையாளர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். என்று கூறினார்.
No comments:
Post a Comment