புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள லாவா நிறுவனத்தின் ஏ55 மற்றும் ஏ50 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் முக்கியமாக கவனிக்க வேண்டியஒரு புள்ளியாக - இந்த விலை வரம்பில் சமீபத்தில் தொடங்கப்பட்ட மற்ற சாதனங்கள் போலல்லாமல் இக்கருவிகள் 3ஜி செயல்பாடு கொண்டுள்ளது. இரண்டு சாதனங்களுமே ஏற்கனவே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டு கருப்பு மற்றும் வெள்ளி வண்ண விருப்பங்களில் கிடைக்கப்பெறுகின்றன. மேலும் இக்கருவிகளின் விலை என்ன.? மற்றும் அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது
ரேம், மெமரி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களுமே குறிப்புகள் அடிப்படையில் ஒரே மாதிரியான அம்சங்களைதான் கொண்டுள்ளன. எனினும், லாவா ஏ55 கருவியானது 1ஜிபி ரேம் கொண்டிருக்க, லாவா ஏ50 கருவியானது 512எம்பி ரேம் கொண்டு வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே (32 ஜிபி வரை) மைக்ரோ எஸ்டிஅட்டை வழியாக மெமரி நீட்டிப்பு வசதி கொண்ட 8ஜிபி உள்ளடக்க சேமிப்பு திறன் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு, டிஸ்ப்ளே, செயலி இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ள இக்கருவிகள் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கும். லாவா ஏ50 மற்றும் ஏ55 ஆகிய இரண்டு கருவிகளுமே 4 இன்ச் டபுள்யூவிஜிஏ (WVGA) (480x800 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் 1.2ஜிகா ஹெர்ட்ஸ் க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.
கேமரா, பேட்டரி ஒளியியல் அடிப்படையில், லாவா ஏ50 மற்றும் ஏ55 ஆகிய இரண்டு கருவிகளும் ஃபிளாஷ் கொண்டுள்ள ஒரு 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் முன்பக்கத்தில் விஜிஏ கேமரா கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே நிறுவனத்தின் முறையீடுகள் படி, 9 மணிநேர 2ஜி இணைப்பு பேச்சு-நேரம் வழங்கும் 1550எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொண்டுள்ளது.
இணைப்பு விருப்பங்கள், அளவீடு புதிதாக தொடங்கப்பட்ட இந்த சாதனங்களின் இணைப்பு விருப்பங்கள் : 3ஜி, வைஃபை, 802.11 பி/ஜி/என், ப்ளூடூத் 2.1, எ-ஜிபிஎஸ் மற்றும் ஒரு 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகள் அடங்கும். லாவா ஏ50 மற்றும் ஏ55 ஆகிய இரண்டு கருவிகளுமே அளவீட்டில் 123x63.4x9.65 மிமீ மற்றும் ஒரேமாதிரியான வடிவமைப்பு கொண்டுள்ளன.
Sunday, January 22, 2017
ஊடக கற்கைகள் நிலையம் கொத்மலை
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் கொத்மலை வளாகத்தில் ஒலிபரப்புக்கலை சார் அறிமுறை செயன்முறை விளக்கங்களுடன் கூடிய கற்கை நெறியானது தேர்ச்சிபெற்ற ஒலிபரப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கையில் நேரடி ஓலிபரப்புக்கலையகத்துடன் கூடிய ஓரேயொரு ஒலிபரப்புத்துறை கற்கைகள் நிலையமாக கொத்மலை ஊடகக்கற்கைகள் நிலையம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆணழகர் போட்டியில் வெற்றியீட்டிய புஸ்ஸல்லாவ மாணவன்
மீண்டும் 2016 தேசிய ஆணழகர் போட்டியில் வெற்றியீட்டிய
புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் மாணவன்
இலங்கை உடற்கட்டு சம்மேளத்தினால் நடாத்தபட்ட 2016 ஆம் ஆண்டு மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகர் போட்;டியில் பங்குபற்றிய புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மாதவன் இராஜகுமாரன் 2016 ஆம் ஆண்டிற்கான ஜ10னியர் மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவாகியுள்ளார். இந்த போட்டியில் சுமார் 35 போட்டியாளர்கள் பங்குபற்றினர்
மலைய மாணவர்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்பது யாபருக்கும் தெரியும். தற்போதும் அன்மைக்காலமாகவும் இவர்கள் அனைத்து துறைகளிலும் சாதனைகளை மேற்க் கொண்டு வருகின்றனர். இருந்தும் இவர்களுக்கான சந்தர்பங்களும். உதவிகளும்¸ வாய்ப்புக்களும் கிடைக்காததினால் பல சாiனையாளர்கள் தோட்டங்களில் முடங்கி கிடக்கின்றனர். இவை கிடைத்தால் நாங்கள் சலைத்தவர்கள் அல்ல சாதிக்க பிறந்தவர்கள் என்று பறைசாட்டுகின்றார் நுவரெலியா மாவட்டம¸; கொத்மலை¸ லபுக்கல்ல தோட்டம்¸ கொண்டகலை பிரிவை சேர்ந்த தோட்ட தொழிலாளிகளான திரு திருமதி மாதவன் பரமேஸ்வரி தம்பதிகளின் புதல்வன் மாதவன் ராஜகுமாரன்இந்த மாதவன் ராஜ்குமாரன் முதலாம் இடத்தை பெற்று தேசிய ரிதியில் வெற்றி பெற்று சாதனையை மீண்டும் ஒரு சாதனையை நிலை நாட்டி உள்ளார். 2015 ஆம் ஆண்டு;ம் இதே சாதனையை நிலை நாட்டியமை குறிப்படதக்கது. இந்த சாதனை மலைகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது. இவர் தற்போது புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் உயர்தர (12) உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்ற வருகின்றார். இவரின் இந்த வெற்றி பாதையில்
• 2014.08.23 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற திறந்த அனைத்து பிரிவினர்களுக்கான ஆணழகர் போட்டியில் மூன்றாம் இடத்தையும்
• 2015 கல்வி அமைச்சின் ஏற்ப்பாட்டில் தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்காக ஹங்வெலயில் நடந்த போட்டியில் 1 ஆம் இடம்
• 2016 தேசிய ரீதியில் நடைபெற்ற மிஸ்டர் நோவிஸ் (ஆச. ழேஎiஉந) உடற்கட்டு போட்டியில் 3 ஆம் இடம்
• கல்வி அமைச்சின் ஏற்ப்பாட்டில் 2016 தேசிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்காண திறந்த ஆணழகர் போட்டியில் 1 ஆம் இடம்
• தற்போது விமானபடை விளையாட்டு குழுவிற்ககும் தெரிவாகி உள்ளார்.
இந்த வெற்றிகள் தொடர்பாக மாதவன் ராஜ்குமாரனிடம் வினவிய போது
இப்போட்டியில் தங்க பற்றி வெற்றிபெற காரணமானவர்கள் எனது பெற்றோர்களான பரமேஸ்வரி மாதவன்¸ இந்து தேசிய கல்லூரி அதிபர்¸ உட்பட ஆசிரியர்கள் கண்டி பவர் ரீ கிரியேட் சென்டர் உரிமையாளர் பாக்கியராஜ் ஐயா அவர்கள்¸ நுவரெலியா எப்சலூட் ஜிம் உரிமையாளரும்¸ பயிற்றுவிப்பாளருமான அமில தர்மதிலக ஐயா அவர்கள் இப்போட்டிக்கான தொடர்சியாக அனுசரனை வழங்கிய கொழும்பு ஜனதா ஸ்டீல் உரிமையாளர் வாசுதேவன் ஐயா அவர்கள்¸ கொழும்பு டையன் ஸ்டீல் ஹாட்வெயார் உரிமையாளர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். என்று கூறினார்.
Labels:
2016 ஆம் ஆண்டு,
Srilanka,
இலங்கை
Location:
Sri Lanka
Subscribe to:
Posts (Atom)